இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை பேக்கரிகளுக்கு வழங்க முடியாது!
#SriLanka
#Egg
#Lanka4
Thamilini
2 years ago
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து முட்டைகளையும் நுகர்வோருக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக மாநில வணிக இதர சட்டப்பூர்வ கழகம் தெரிவித்துள்ளது.
அத்துடன் நாளாந்தம் ஒரு மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்யப்படுவதாக அதன் தலைவர் ஆசிறி வலிசுந்தர குறிப்பிட்டுள்ளார்.
எனினும், அந்த முட்டைகளை பேக்கரிகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு வழங்க முடியாது என எனத் தெரிவித்த அவர், லங்கா சதொச ஊடாக தினமும் ஒரு மில்லியன் முட்டைகள் விநியோகிக்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.
அடுத்த வாரத்திற்குள் அனைத்து பல்பொருள் அங்காடிகளுக்கும் பொதி செய்யப்பட்ட முட்டைகளை விநியோகிக்கும் விசேட வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், பல்பொருள் அங்காடிகளில் விற்கப்படும் பொதி செய்யப்பட்ட முட்டை ஒன்றின் விலை 42 ரூபா எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.