சுகாதார அமைச்சர் பதவியை இராஜினாமா செய்ய சொன்னார்கள்: கெஹலிய

#SriLanka #Keheliya Rambukwella #Minister
Prathees
2 years ago
சுகாதார அமைச்சர் பதவியை இராஜினாமா செய்ய சொன்னார்கள்: கெஹலிய

சுகாதார அமைச்சர் பதவியை இராஜினாமா செய்யுமாறு மனைவி மற்றும் பிள்ளைகள் மாத்திரமே தன்னிடம் கூறியுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

 தன்னை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யுமாறு வேறு யாரும் கூறவில்லை என்றும் அவர் கூறினார்.

 சுகாதார அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி ரம்புக்வெல்லவுக்கு அறிவித்துள்ளதாக சமூக ஊடகங்களில் பரவிவரும் செய்திகள் தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 சவால்களில் இருந்து தப்பி ஓடுவதில்லை, அவற்றை எதிர்கொள்ளும் வலிமை தனக்கு உள்ளது என்றார்.

 சுகாதாரத் துறையில் சில பிரச்சினைகள் இருப்பதை ஒப்புக்கொள்வதாகவும், முடிந்தவரை அவற்றுக்கான தீர்வுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 சுகாதாரத் துறையில் நிலவும் பிரச்சனைகள் குறித்து ஊடகங்களுக்கு தகவல் வழங்க குழுவொன்று நியமிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!