கடிதம் எழுதிவிட்டு பல் வைத்தியர் தூக்கிட்டு தற்கொலை
மொனராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலியாய எண்ணெய் நிரப்பும் நிலையத்திற்கு அருகில் வாடகை வீட்டில் தங்கியிருந்த வெல்லவாய ஹந்தபானகல பிரதேசத்தில் வசிக்கும் அரச பல் வைத்தியர் ஒருவர் கடந்த 3 ஆம் திகதி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக மொனராகலை பொலிஸார் தெரிவித்தனர்.
பதுளை மாகாண வைத்தியசாலையில் பணிபுரிந்த பல் வைத்தியரான சஹான் கௌஷல் ரத்நாயக்க (வயது 42)இ இரண்டு பிள்ளைகளின் தந்தையான ரத்நாயக்க முதியன்சேலா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
3 ஆம் திகதி காலை வீட்டில் இருந்து தனது இரண்டு பிள்ளைகள் மற்றும் மனைவியுடன் காரில் பதுளை பொது வைத்தியசாலைக்கு செல்வதற்காக புறப்பட்டார்.
தாதியான மனைவி மொனராகலை வைத்தியசாலைக்கு அருகில் இறக்கிவிடப்பட்டு இரண்டு பிள்ளைகளும் மொனராகலை மஹாநாம பாடசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
வீட்டில் வேலை செய்யும் பெண் மதியம் 12.45 மணியளவில் வீட்டிற்கு வந்துள்ளார் டொக்டரின் கார் வீட்டின் அருகே இருந்தது, வீட்டின் கதவுகள் பூட்டப்பட்டிருந்தன.
அவர் டொக்டரை அழைத்துள்ளார். ஆனால் அவர் பதிலளிக்கவில்லை, எனவே மருத்துவரின் மனைவிக்கு தொலைபேசி அழைப்பு மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படிஇ வீட்டிற்கு வந்த மனைவி, வீட்டின் ஜன்னலை திறந்து பார்த்தபோது, அறையில் உள்ள மேற்கூரையில் தூக்கில் தொங்கியபடி இருப்பதைப் பார்த்துள்ளார்.
இது தொடர்பில் மொனராகலை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் வந்து கதவை திறந்து பார்த்த போது வைத்தியர் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.
வீட்டில் உள்ள மேஜையில் மருத்துவர் எழுதிய கடிதத்தை பொலிசார் கண்டுபிடித்தனர் இந்த மரணத்திற்கு யாரும் காரணமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த வைத்தியர் மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் சில காலம் கடமையாற்றி அப்பகுதி மக்களிடையே பிரபலமடைந்ததுடன் சமூக சேவையாளர் எனவும் அறியப்பட்டுள்ளார்.
மொனராகலை மரண விசாரணை அதிகாரி டி. எஸ். குணதிலக்க அவர்களால் நடத்தப்பட்டதுடன், பிரேத பரிசோதனையை மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையின் விசேட சட்ட வைத்திய அதிகாரி திருமதி நிசன்சலா லக்மாலி மேற்கொண்டார்.
மொனராகலை தலைமையக பொலிஸ் பரிசோதகர் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்.