இலங்கை பாராளுமன்றத்துக்குள்ளும் பெண்கள் துஷ்பிரயோகம் - நீதி விசாரணை ஆரம்பம்
இலங்கை பாராளுமன்றத்தின் பிரிவுக்குள் பராமரிப்பு பணியாற்றும் பெண்களை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம்குஷானி ரோஹணதீரவினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற இயக்குநர் (நிர்வாகம்) ஜி. தச்சனா ராணி தலைமையிலான இந்தக் குழுவில் ஹன்சார்ட் ஆசிரியர் சி.என்.எல் டி சில்வா மற்றும் உதவிப் பணிப்பாளர் (நிர்வாகம்) இந்திரா திஸாநாயக்க ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
மேற்படி குழு உறுப்பினர்களை பாராளுமன்ற உறுப்பினர்கள் நேரில், மின்னஞ்சல் அல்லது தொலைபேசி மூலமோ சந்திக்க முடியும் என பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. குழு உறுப்பினர்களைத் தவிர, பாராளுமன்ற செயலாளர் நாயகம் அல்லது உதவிச் செயலாளர் நாயகத்திடம் இது தொடர்பான தகவல்களை சமர்ப்பிக்க முடியும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தகவல்களை வழங்குபவர்களின் அடையாளங்கள் தொடர்பில் பூரண இரகசியம் மற்றும் பாதுகாப்பைப் பேணுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சுற்றறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தின் பராமரிப்பு பிரிவில் பணிப்பெண்களாக கடமையாற்றும் பெண்கள், பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாவதாக அண்மையில் செய்திகள் வெளியாகி இருந்தன.
இவ்விடயத்தில் தங்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டுமென பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியிகாயிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பாதிக்கப்பட்டவர்கள் வெளியே வ ந்து கூற அச்சமடையலாம்.குற்றவாளிகளின் பின் புலம் பலமாக இரு ந் தால் அவர்களுக்கு பாதுகாப்பை வளங்க யாரும் முன்வர மாட்டார்கள் என்ற பயமும் அவர்களிடம் இருப்பதால் நீதி கண் மூடுமா? அல்லது கண்ணீர் மட்டும் வடிக்குமா? கண் திற ந் தி நெருப்பு தீயை இறைக்குமா? என்ற கேழ்வியே அனைவரின் மனதிலும் உள்ளது.
இங்கு மட்டுமல்ல இலங்கையில் பஞ்சம் தலை விரித்து ஆடுவதால் ஏழைகள் பலர் இப்படி பல அலுவலகங்களில் சீரளிக்கப்படுவது அறிதகூடியதாக உள்ளது.“நீதி நிஜமானால்! நாதியற்றவர் யாரும் இல்லை இவ்வுலகில்”