புனித ஹஜ் கிரியைகள் முடிந்து மக்காவில் நடைபெற்ற புனித கபாவை கழுவும் நிகழ்ச்சி

#Temple #Muslim #Mosque #SaudiArabia
Prasu
2 years ago
புனித ஹஜ் கிரியைகள் முடிந்து மக்காவில் நடைபெற்ற புனித கபாவை கழுவும் நிகழ்ச்சி

இந்த வருட புனித ஹஜ் கிரியைகள் முடிந்து மக்காவில் உள்ள புனித கபாவை கழுவும் நிகழ்ச்சி நடைபெற்றது. மக்கா துணை ஆளுநர் இளவரசர் பத்ர் பின் சுல்தான், புனித ஆலயங்களின் சேவகரான மன்னர் சல்மான் சார்பாக விழாவிற்கு தலைமை தாங்கினார். 

இரு ஹராம் அலுவலகத் தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் அல் சுதைஸ், உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சிறப்பு விருந்தினர்கள் மற்றும் இராஜதந்திர பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

கபாவின் உட்புறம் பன்னீருடன் கலந்த புனித சம்ஸம் நீரால் கழுவப்பட்டது. பின்னர் கபாலாவுக்கு ஊது எண்ணெய் மற்றும் ரோஸ் ஆயில் மூலம் நறுமணம் பூசப்பட்டது.

லுலு குழுமத்தின் தலைவர் எம்.ஏ.யூசபலியும் கஅபா கழுவும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

 புனித மக்காவில் கபாவை கழுவும் நிகழ்வில் கலந்து கொள்ள முடிந்தது பெரும் பாக்கியம் என்றும், இந்த அழைப்பிற்காக சவுதி ஆட்சியாளர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் யூஸஃபலி தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!