சிங்கப்பூரில் 2024 ஆம் ஆண்டு முதல் அமுலாகும் புதிய தடை

சிங்கப்பூரில் 2024 ஆம் ஆண்டு முதல் புறப்படும் போது வெளிநாட்டவர்கள் உட்பட அனைத்துப் பயணிகளும் தங்கள் கடவுசீட்டுகளை காண்பிக்க தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்குப் பதிலாக, பயணிகளின் டிஜிட்டல் அடையாளம் மற்றும் செல்லும் விமானத்தின் தகவல்களை கொண்டு தனித்துவம் வாய்ந்த i டோக்கன் உருவாக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
Bag-drop, இமிக்ரேஷன் மற்றும் போர்டிங் போன்ற பல தானியங்கி சோதனைச் சாவடிகளில் பயணிகளின் அடையாளம் மற்றும் விமான விவரங்களைச் சரிபார்க்க அது பயன்படும்.
அதாவது, விமான நிலையத்தில் பயணி ஒருவரின் புறப்பாடு அனுமதி என்பது மனித ஈடுபாடு இல்லாமலும், தானியங்கி முறையிலும் இருக்கும். இந்த குடிநுழைவு சட்ட திருத்த மசோதா 2ஆம் திகதி நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இரண்டாவது உள்துறை அமைச்சர் ஜோசபின் தியோ அதனை அறிமுகம் செய்தார். அதே போல, சிங்கப்பூருக்கு வருவதற்கு முன் பயணிகளைப் பற்றிய தகவல்களைப் பெறவும், அதனை மதிப்பீடு செய்யவும் ICA அதிகாரிகளுக்கு இந்த மசோதா கூடுதல் அதிகாரத்தை வழங்குகிறது.



