4 குற்றச்சாட்டுகளில் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் குற்றமற்றவர் என தீர்ப்பு

#Court Order #America #Case #Trump
Prasu
2 years ago
4 குற்றச்சாட்டுகளில் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் குற்றமற்றவர் என தீர்ப்பு

2020ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை மாற்றி அமைப்பதற்கான முயற்சிகள் செய்தார் என்ற முறைப்பாடு தொடர்பான 4 குற்றச்சாட்டுகளில் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றமற்றவர் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

இன்று வாஷிங்டன் டி.சி. நீதிமன்றத்தில் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் ஆஜரான போதே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டடுள்ளது. மேலும், அடுத்தகட்ட விசாரணை ஒகஸ்ட் 28 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

2020 ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முற்பட்டார் என அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு எதிராக நீதிமன்றத்தில் பிரதானமாக 4 குற்றச்சாட்டுக்களும் மேலும் அதனுடன் தொடர்புடைய ஏனைய குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்பட்டார்.

மேலும், டிரம்ப் அமெரிக்காவின் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடனின் வெற்றியை காங்கிரஸ் சான்றழிப்பதை தடுக்க முயன்றார் என 45 பக்க குற்றச்சாட்டுகளில் தெரிவிக்கப்பட்டன.

மிகக் கடுமையான குற்றச்சாட்டுக்கு அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும். எனவே ட்ரம்புக்கும் அதேமாதிரியிலான தண்டனை கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையிலேயே இவ்வாறு அவர் குற்றமற்றவர் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

 இவரின் மீது பாலியல் மற்றும் மோசடி உள்ளிட்ட வழக்குகளும் நிலுவையில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!