சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தலைவர் உயிரிழப்பு

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபு அல் ஹுசைன் அல் ஹுசைனி அல் குரேஷி சிரியாவில் உயிரிழந்ததை அந்த அமைப்பு உறுதி செய்துள்ளது. சிரியாவின் இட்லிப் பகுதியில் துருக்கியின் ஆதரவு பெற்ற ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாமுடன் நடந்த மோதலில் அதன் தலைவர் கொல்லப்பட்டதாக அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் சர்வதேச ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
மேலும், மரணம் எப்போது நிகழ்ந்தது என்பதை செய்தித் தொடர்பாளர் குறிப்பிடவில்லை. துருக்கிய தேசிய புலனாய்வு அமைப்பு குரைஷியை மிக நீண்டகாலமாக பின்தொடர்ந்து வந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
இதற்கிடையில், தனது அமைப்பின் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான அபு உமர் அல்-முஜஹிர், ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் அமைப்பினால் கைப்பற்றப்பட்டதை ஐஎஸ்ஐஎஸ் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தினார்.
ஒரு காலத்தில் ஈராக் மற்றும் சிரியாவின் மூன்றில் ஒரு பகுதியை ஆட்சி செய்த அமைப்பின் நிழல் ஐஎஸ் ஐஎஸ் அமைப்பு என இஸ்லாமிய அரசு குறிப்பிட்டுள்ளது. புதிய தலைவர் பற்றி எந்த விவரமும் தெரிவிக்கவில்லை.
2014 ஆம் ஆண்டு அதன் அப்போதைய தலைவரான அபு பக்கர் அல்-பாக்தாதி தனது கட்டுப்பாட்டில் இருந்த பகுதியை கலிபாவாக அறிவித்தபோது இயக்கம் அதன் உச்சத்தை எட்டியது.
அமெரிக்கா தலைமையிலான கூட்டணி உட்பட இரு நாடுகளிலும் உள்ள எதிரிகளால் அது மீண்டும் தோற்கடிக்கப்பட்டது, மேலும் 2019 இல் சிரியாவில் அமெரிக்க இராணுவ நடவடிக்கையின் போது பாக்தாதி கொல்லப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



