தென் கொரியாவில் பொதுமக்கள் மீது காரை ஏற்றி கத்தியால் குத்தியதில் 14 பேர் பலத்த காயம்

தென் கொரியாவின் லெசூர் மாகாணத்தில் உள்ள சியோங்னாமில் அமைந்துள்ள ஒரு வணிக வளாகம் உள்ளது. அங்கு நேற்றிரவு கணிசமான மக்கள் கூடியிருந்தனர். அப்போது கடையின் உள்ளேயும், வெளியேயும் ஏராளமானோர் இருந்தனர்.
பின்னர், ஒரு கார் வேகமாக வணிக வளாகத்திற்கு வந்தது, டிரைவர் திடீரென பாதசாரிகள் மீது மோதியதில் ஐந்து பேர் பலத்த காயம் அடைந்தனர். பின்னர் காரை நிறுத்தி விட்டு மர்ம வாலிபர் கீழே இறங்கினான். திடீரென அவன் கையில் வைத்திருந்த கத்தியால் கண்ணில் பட்டவர்களை எல்லாம் சரமாரியாக குத்தினான். இதில் பலருக்கு கத்திக்குத்து விழுந்தது.
இதைப் பார்த்த பொது மக்கள் தங்கள் பாதுகாப்புக்கு அஞ்சி பல்வேறு திசைகளிலும் சிதறி ஓடினர். இந்த கத்திக்குத்து சம்பவத்தில் 9 பேர் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். நிலைமை குறித்து தகவல் அறிந்த பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களை குறிவைத்து காரை ஓட்டி வந்து கத்தியால் தாக்கிய இளைஞரை கைது செய்தனர்.
கார் ஏற்றியதிலும், மற்றும் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தில் காயமடைந்த 14 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களில் இருவர் ஆபத்தான நிலையில் உள்ளனர். தென்கொரியாவில் இவ்வருடத்தில் இது போன்று இரண்டாவது முறையாக சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.



