புளோரிடாவில் வினோத போட்டி பாம்புகளை கொல்கிறார்களோ அவரே வெற்றி பெற்றவர்

#India #world_news #Tamilnews #ImportantNews
Mani
2 years ago
புளோரிடாவில் வினோத போட்டி பாம்புகளை கொல்கிறார்களோ அவரே வெற்றி பெற்றவர்

அமெரிக்காவின் உள்ள புளோரிடா மாநிலத்தில் வித்தியாசமான போட்டி நடத்தப்படுகிறது. பாம்பு பிடித்து கொல்லும் போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து பங்கேற்பாளர்கள் வந்து கலந்து கொள்கின்றனர்.

போட்டியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் பர்மிய மலைப்பாம்புகளைப் பிடித்து கொல்ல வேண்டும். அதிக எண்ணிக்கையிலான பாம்புகளை கொல்கிறார்களோ அவர்கள் வெற்றியாளராக கருதப்படுகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும், புளோரிடா பைதான் சவால் கனடா, பெல்ஜியம் மற்றும் லாட்வியாவிலிருந்து நூற்றுக்கணக்கானவர்கள் பங்கேற்கின்றனர்.

16 அடி வரை நீளமுள்ள இந்த மலைப்பாம்புகளை பிடிக்க அதிக திறனும் துணிச்சலும் தேவைப்படும். ஆனாலும், ஆபத்தான இந்த போட்டியில் பங்கு பெறும் போட்டியாளர்கள், இதில் கிடைக்கும் புகழ் மற்றும் பணத்தால் ஈர்க்கப்பட்டு கலந்துக்கொள்கின்றனர். போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கான பரிசுத் தொகை தோராயமாக ரூ.25 லட்சம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புளோரிடாவின் தெற்குப் பகுதியில் 20,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் எவர்க்லேட்ஸ் சதுப்புநிலம் பரவியுள்ளது. அங்கு அதிகமாக உலவும் பர்மிய மலைப்பாம்புகள் பிற உயிரினங்களை கொன்று, சுற்றுசூழல் சமநிலையை சேதப்படுத்துவதாகவும், அதனால் இந்த போட்டி அவசியமானது என உள்ளூர் வன மற்றும் இயற்கை பாதுகாவலர்கள் கூறுகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!