திருவண்ணாமலையில் சொத்துக்காக பெற்ற தாயை கட்டையால் அடித்துக் கொன்ற மகன் கைது!

#Death #Tamilnews #Breakingnews #Died #ImportantNews #Killed
Mani
2 years ago
திருவண்ணாமலையில் சொத்துக்காக பெற்ற தாயை கட்டையால் அடித்துக் கொன்ற மகன் கைது!

திருவண்ணாமலை மாவட்டத்தில் சொத்துக்காக பெற்ற தாயை அடித்துக் கொன்ற மகன் கைது செய்யப்பட்டார். ஆரணி அருகே உள்ள கேளூர் பகுதியைச் சேர்ந்தவர் சிவகாமி. கணவனை இழந்த இவர் மகன் ராஜாவுடன் வசித்து வந்தார்.

ஆனால் குடும்பச் சொத்தான வீடு மற்றும் நிலத்தை விற்று பணத்தைத் தருமாறு ராஜா அவ்வப்போது சண்டையிட்டு வந்துள்ளார். இந்நிலையில், 100 நாள் வேலைத்திட்டத்திற்கு சென்று வந்த ராஜா, வழக்கம் போல சிவகாமியிடம் தகராறு செய்து கட்டையால் தாக்கியுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த சிவகாமி உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் ஆரணி போலீசார் ராஜாவைக் கைது செய்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!