பாராளுமன்ற உறுப்பினர் பௌசி மீதான லஞ்ச வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

#SriLanka #Colombo #Court Order
Prathees
2 years ago
பாராளுமன்ற உறுப்பினர் பௌசி மீதான லஞ்ச வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

 நாடாளுமன்ற உறுப்பினர் ஏ. எச்.எம். பௌசிக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 6ஆம் திகதி விசாரணைக்கு முந்திய விசாரணைக்கு அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. 

வெளிநாட்டில் இருந்து வழங்கப்பட்ட வாகனத்தை முறைகேடாக பயன்படுத்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது

 அனர்த்த முகாமைத்துவ அமைச்சராக கடமையாற்றிய போது நெதர்லாந்து அரசாங்கம் அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கு வழங்கிய வாகனத்தை தனது தனிப்பட்ட பாவனைக்கு பயன்படுத்தி அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!