மெக்சிகோவில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இந்தியர்கள் உட்பட 18 பேர் உயிரிழப்பு
#India
#Death
#Accident
#people
#world_news
#Bus
#Mexico
#Breakingnews
#Died
#ImportantNews
#Injury
Mani
2 years ago

மேற்கு மெக்சிகோவில் அதிகாலை பயணிகள் பேருந்து ஒன்று அமெரிக்க எல்லை நகரமான டிஜுவானாவை நோக்கி சென்று கொண்டிருந்தது. பேருந்தில் மொத்தம் 42 பயணிகள் இருந்தனர், அவர்கள் இந்தியா, டொமினிகன் குடியரசு மற்றும் பல்வேறு ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
மாநில தலைநகர் டெபிக்கிற்கு வெளியே நெடுஞ்சாலையில் பர்ரான்கா பிளாங்கா அருகே சென்று கொண்டிருந்த பேருந்து, சாலையை விட்டு விலகி பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 18 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், சுமார் 20 பேர் பலத்த காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பேருந்தில் பயணம் செய்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பயணிகளின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் அடையாளங்கள் தெரியவில்லை. பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.



