கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகளை நிறைவு செய்ய இலங்கை தீர்மானம்!

#SriLanka #Sri Lanka President #IMF
Mayoorikka
2 years ago
கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகளை நிறைவு செய்ய இலங்கை தீர்மானம்!

செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் முதலாவது மீளாய்வுக்கு இணங்க, கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகளை நிறைவு செய்ய இலங்கை உத்தேசித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

 அவுஸ்திரேலியாவின் CPA நிறுவகத்தை இலங்கையில் நிறுவும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

 “நாங்கள் ஆரம்பித்துள்ள பரந்த மற்றும் நீண்ட கால சீர்திருத்தங்கள் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான தெளிவான அறிகுறிகளைக் காட்டுகின்றன. 

பொதுச் செலவினங்களை திறம்பட நிர்வகிக்க அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்தது. இருப்பினும், நமக்கு முன்னால் ஒரு நீண்ட பயணம் உள்ளது” எனத் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!