முட்டையினை இறக்குமதி செய்யப்பட்டது போன்று பாலினையும் இறக்குமதி செய்ய வேண்டாம்

#SriLanka #prices #Egg #Lanka4
Kanimoli
2 years ago
முட்டையினை இறக்குமதி செய்யப்பட்டது போன்று   பாலினையும் இறக்குமதி செய்ய வேண்டாம்

முட்டையினை இறக்குமதி செய்யப்பட்டது போன்று பாலினையும் இறக்குமதி செய்யாதிருக்க ஏற்பாடு செய்யுங்கள் என கால்நடை பண்ணையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிளிநொச்சியில் அவர்கள் ஏற்பாடு செய்த ஊடக சந்திப்பிலேயே இவ்விடயத்தை அவர்கள் தெரிவித்தனர். 

மேலும் தெரிவிக்கையில், தற்பொழுது ஏற்பட்டுள்ள கடும் வரட்சி நிலை காரணமாக கிளிநொச்சி கால்நடை பண்ணையாளர்கள் பாதிப்புக்களை எதிர்கொண்டு வருகின்றனர். கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தற்பொழுது ஏற்பட்டுள்ள கடும் வறட்சியான காலநிலை காரணமாக நீர்நிலைகள் முற்றும் முழுதாக வற்றிய நிலையில் காணப்படுகிறது. 

 வெளிநாடுகளில் இருந்து முட்டை இறக்குமதி செய்யப்பட்டதை போன்று பாலையும் இறக்குமதி செய்யிதிருக்க கால்நடை பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக உதிய தீர்வினை பெற்று தர வேண்டுமென கால்நடை பண்ணையாளர்களின் கிளிநொச்சி கரைச்சி வடக்கு கால்நடை கூட்டுறவாளர் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!