500 போதை மாத்திரைகளுடன் புத்தளத்தைச் சேர்ந்த நபர் கைது
#Jaffna
#Arrest
#drugs
#tablets
Prasu
2 years ago
யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் ஒரு தொகை போதை மாத்திரைகளுடன் புத்தளம் பகுதியை சேர்ந்த 23 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் , பண்ணைப் பாலத்தில் வைத்து குறித்த நபரை கைது செய்து சோதனையிட்ட போது, அவரது உடமையில் இருந்து, 500 போதை மாத்திரைகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.
குறித்த நபரை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.