கடனை செலுத்த ஆரம்பித்தாலும் ரூபாய் வீழ்ச்சியடையாது: மத்தியவங்கி
#SriLanka
#Central Bank
#Dollar
Mayoorikka
2 years ago
வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான ஆரம்பத்துடன் ரூபாவின் பெறுமதி கடுமையாக வீழ்ச்சியடையும் என்ற வதந்திகளில் உண்மையில்லை என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
டொலருக்கான தேவை குறைவினால் இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவாக இருப்பதாகவும் கடனை செலுத்த ஆரம்பித்தவுடன் டொலருக்கான தேவை அதிகமாகி ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடையும் எனவும் சிலர் கூறுகின்றனர்.
ஆனால் எதிர்வரும் தேர்தல்கள் மற்றும் இலங்கையில் டொலர் வருமானம் அதிகரிப்பதன் காரணமாக டொலருக்கு தேவையை இலகுபடுத்தும் திறன் இருப்பதாக மத்திய வங்கி கூறுகிறது.
மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வுத் துறையின் பணிப்பாளர் ஜி.கே.ஜி. திரு.ஹரிச்சந்திர இதனைத் தெரிவித்தார்.