எரிவாயுவின் விலை தொடர்பில் சற்றுமுன்னர் வெளியான தகவல்!
#SriLanka
#prices
Mayoorikka
2 years ago
உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ள போதிலும், உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிக்கப்படாது என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் சற்று முன்னர் தெரிவித்தார்.
எனினும் தற்போது உலக சந்தையில் ஒரு மெட்ரிக் தொன் எரிவாயுவின் விலை 85 அமெரிக்க டொலர்களுக்கு மேல் அதிகரித்துள்ளது.
எவ்வாறாயினும், மாதாந்த கட்டண திருத்தத்தின் படி, இம்முறைக்கான எரிவாயு விலை திருத்திற்கு அமைய புதிய விலைகள் இன்று அறிவிக்கப்படும் என நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இதற்கு முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.