கட்டுநாயக்காவிலிருந்து குறைந்த கட்டணத்தில் விமான சேவை வழங்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்!

#SriLanka #Flight #Airport
Mayoorikka
2 years ago
கட்டுநாயக்காவிலிருந்து குறைந்த கட்டணத்தில் விமான சேவை வழங்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்!

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கும் அபுதாபி விமான நிலையத்திற்கும் இடையில் குறைந்த கட்டண விமான சேவையை ஆரம்பிப்பதற்கு இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகாரசபை வான் நடவடிக்கை சான்றிதழை வழங்கியுள்ளது. 

 எயார் ஏசியா - அபுதாபி விமான சேவை நிறுவனத்திற்கு நேற்று விமான நடவடிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

 அதற்காக, பயணிகளின் பாதுகாப்பு, மற்றும் திறமையான விமானச் செயல்பாடுகளைப் பேணுவதற்கான விமான நிறுவனத்தின் நிறுவன அமைப்பு மற்றும் திட்டத்திற்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

 இந்த விமான நிறுவனம் செப்டம்பர் மாதத்தின் நடுப்பகுதியில் இருந்து தனது விமானச் செயல்பாடுகளைத் தொடங்க உள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!