உணவு வீணடிப்பு தேசிய ரீதியில் விலைவாசி உயர்வுக்கு வழிவகுக்கும்!
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் வழிகாட்டலின் கீழ் தயாரிக்கப்பட்ட அறிக்கை விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக பேராசிரியர்கள் உள்ளிட்ட நிபுணர்கள் குழுவினால் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கை 25 மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவு என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
பேராசிரியர் புத்தி மரம்பே இது தொடர்பான அறிக்கையை விவசாய அமைச்சரிடம் கையளித்துள்ளதுடன், அந்த ஆய்வின்படி கொழும்பு மாவட்டத்தில் உணவு வீணாக்கப்படுவது தேசிய ரீதியில் உணவுப் பொருட்களின் விலை உயர்வை எவ்வாறு பாதிக்கிறது என்பது விளக்கப்பட்டுள்ளது.
இதேவேளை வரட்சி காலத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் உள்ள விவசாயிகளுக்கு தேவையான குறைந்தபட்ச நீரை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேராதனை பல்கலைக்கழக விவசாய பீட விவசாய பயிர் விஞ்ஞான பேராசிரியர் புத்தி மரம்பே தெரிவித்தார்.
நாட்டின் விவசாயம் மீண்டு வரும் நிலையில் இருப்பதால், இந்த பிரச்சனைக்கு அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுப்பது மிகவும் அவசியம் என அவர் சுட்டிக்காட்டுகிறார்.