கொழும்பு துறைமுகத்தின் கொள்கலனை அதிகரிப்பது குறித்து பரிசீலனை!

#SriLanka #Lanka4
Thamilini
2 years ago
கொழும்பு துறைமுகத்தின் கொள்கலனை அதிகரிப்பது குறித்து பரிசீலனை!

கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் கையாளும் திறனை அதிகரிப்பது குறித்து துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சு பரிசீலித்து வருவதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். 

இலங்கை துறைமுக அதிகார சபையின் (SLPA) கிழக்கு கொள்கலன் முனையத்தில் (ECT) செயற்பாட்டு கட்டிடத்தின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் ,இவ்வாறு தெரிவித்துள்ளார்

இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், கொழும்பு துறைமுகத்தில் தற்போதைய 8.5 மில்லியன் TEU கையாளும் திறன் இருக்கும். ECT, ஜெயா கன்டெய்னர் டெர்மினல் V (JCT-V), மேற்கு சர்வதேச கொள்கலன் முனையம் (WICT) மற்றும் எதிர்காலத்தில் முன்மொழியப்பட்ட வடக்கு துறைமுகத் திட்டங்கள் ஆகியவற்றின் மூலம் 35 மில்லியனாக அதிகரித்தது எனத் தெரிவித்துள்ளார். 

அத்துடன்   ECT செயல்பாட்டு கட்டிடத்தின் கட்டுமானம் மார்ச் 8, 2023 அன்று தொடங்கியது. 1300 மீட்டர் முனையம் USD 580 மில்லியன் செலவில் கட்டப்படும் எனவும்  முனையத்தில் செயல்பட தேவையான கேன்ட்ரி கிரேன்கள் ஏற்கனவே ஆர்டர் செய்யப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

முனையத்தில் நான்கு மாடிகள் கொண்ட பிரதான செயல்பாட்டுக் கட்டிடம் கட்ட  1,300 மில்லியன் ரூபாய் மற்றும் அடுத்த ஆண்டு பிப்ரவரிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 

  உலகளாவிய வர்த்தக கப்பல் துறையில் சமீபத்திய போக்குகளை நன்கு அடையாளம் காண வேண்டும் எனவும் இது மிகவும் இலாபகரமான மற்றும் அதிக போட்டி நிறைந்த வணிக சூழலில் இயங்குகிறது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!