உலக நாடுகளுக்கு நைஜர் ராணுவம் விடுத்த எச்சரிக்கை

#Country #Warning #SouthAfrica
Prasu
2 years ago
உலக நாடுகளுக்கு நைஜர் ராணுவம் விடுத்த எச்சரிக்கை

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் ஜனநாயக ஆட்சியை கவிழ்த்துவிட்டு அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியது. அதிபர் முகமது பாசும் கைது செய்யப்பட்டார். 

இதற்கு ஐ.நா. மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் உலக நாடுகளுக்கு நைஜர் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இதுதொடர்பாக ராணுவ ஜெனரல் அப்துல்ரஹ்மானே டிசியானி தேசிய தொலைக்காட்சியில் உரையாற்றியபோது கூறியதாவது:- நைஜர் மக்கள் மீது சொல்ல முடியாத துன்பங்களை ஏற்படுத்தவும், நம் நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தவும் விரும்பும் அனைவரையும் தோற்கடிக்க ஒட்டுமொத்த மக்களையும் ஒற்றுமைக்காக நாங்கள் அழைக்கிறோம்.

எங்களது உள்நாட்டு விவகாரத்தில் அண்டை நாடுகள், சர்வதேச சமூகங்கள் தலையிட வேண்டாம். தேர்தலுக்கு அமைதியான சூழ்நிலையை உருவாக்குவோம். இவ்வாறு அவர் கூறினார். 

 ராணுவ புரட்சியை அடுத்து நைஜருக்கு மின் வினியோகத்தை அண்டை நாடான நைஜீரியா நிறுத்தியுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4