எரிவாயு சிலிண்டர்களின் விலை இந்த மாதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது

#SriLanka #Litro Gas #Lanka4
Kanimoli
2 years ago
எரிவாயு சிலிண்டர்களின் விலை இந்த மாதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது

உலகளாவிய ரீதியில் எரிவாயு விலை உயர்வினால் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலை இந்த மாதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக லிட்ரோ காஸ் நிறுவனம் சூசகமாக தெரிவித்துள்ளது.

 உலக சந்தையில் ஒரு மெட்ரிக் தொன் எரிவாயுவின் விலை 85 அமெரிக்க டொலர்களுக்கு மேல் அதிகரித்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

 அதன்படி, இந்த விலை உயர்வு உள்ளூர் சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். உள்நாட்டு லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களுக்கான புதிய விலை நாளை அறிவிக்கப்படும் என தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

 எரிவாயு விலை சூத்திரத்தின் அடிப்படையில் லிட்ரோ எரிவாயு விலைகள் மாதந்தோறும் திருத்தப்படுகின்றன. இந்த விலை உயர்வு ஒவ்வொரு மாதமும் 5ம் திகதி முதல் அமுலுக்கு வருகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!