சுவிட்சர்லாந்தில் தங்கியிருத்தல் அல்லது வேலை செய்தல் தொடர்பான வதிவிட அனுமதி தகவல்

#Switzerland #சுவிட்சர்லாந்து #சுவிஸ் #சுவிஸ்சர்லாந்து #Swiss
சுவிட்சர்லாந்தில் தங்கியிருத்தல் அல்லது வேலை செய்தல் தொடர்பான வதிவிட அனுமதி தகவல்

நீண்ட காலத்திற்கு சுவிஸில் வாழ்ந்து வேலை செய்வதாயின் ஒரு அனுமதிப்பத்திரம் தேவை. பல தரப்பட்ட வதிவிட உரிமைகளுக்கும் நிரந்தர வதிவிட உரிமைக்கும் வித்தியாசங்கள் உண்டு.

 அனுமதி வகைகள்

 எவர் சுவிஸில் தங்கியுள்ள காலப்பகுதியில் வேலை செய்கிறாரோ அன்றி 3 மாதத்திற்கு மேல் தங்குகிறாரோ அவருக்கு ஒரு அனுமதி தேவைப்படுகிறது. 

இது மாநிலக் குடிவரவும் உள்வாங்குதலும் (Amt für Migration und Integration) நிர்வாகத்தால் வழங்கப்படும். இவற்றில் குறுகியகாலத் தங்குமிட அனுமதி (1 வருடம் வரை), தங்குமிட அனுமதி ( கால எல்லையுடன்) மற்றும் நிரந்தர வதிவிட உரிமை (காலவரையற்றது) வரை வித்தியாசப்படுகிறது.

 குறுகிய வதிவிடஉரிமை (L) இந்த அனுமதி உள்ளவர்கள் குறிப்பிட்ட கால எல்லை வரை (அதிகமாக 1 வருடம்) முக்கிய காரணத்தையிட்டு சுவிஸில் வாழலாம்.

 அதிகமான EU/EFTA நாட்டுப் பிரஜைகள் வேலை வாய்ப்புக் கிடைத்தால் 3 மாதம் முதல் ஆதாரத்துடன் (வேலைப்பத்திரம்)1 வருடம் வரை இருக்கலாம். வதிவிட உரிமை (B) இந்த அனுமதி உள்ளவர்கள் நீண்ட காலம் சுவிஸில் தங்கலாம்.

 EU/EFTA நாட்டுப் பிரஜைகள் தமக்கு 1 வருடத்திற்கு மேற்பட்ட வேலைப்பத்திரம் உள்ளது என ஆதாரம் காட்டினால் அவர்கள் 1 வருடத்திற்கு மேலாக வேலை செய்ய முடியும். EU/EFTA நாட்டுப்பிரஜைகளிற்கான அனுமதி 5 வருடங்களிற்கு வழங்கப்படுகிறது. 

மற்றைய நாட்டவர்களுக்கு 1 வருடத்திற்கு வழங்கப்படுகிறது. அதன்பின்பு அவர்கள் விசா நீடிப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும். இந்த விசா நீடிப்பு எதாவது நிபந்தனைகளையொட்டி கிடைக்கலாம். உதாரணமாக டொச் வகுப்புக்குப் போதல். சில சமயம் ஏதாவது குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தால் அல்லது நலன்புரி விடயங்களில் மற்றவரைச் சார்ந்திருந்தால் வர வேண்டிய விசா நீடிப்புத் தடைப்படலாம். 

அங்கீகரிக்கப்பட்ட அகதிகளுக்கும் B வதிவிட அனுமதி கிடைக்கும். நிரந்தர வதிவிட அனுமதி (C) சுவிஸில் தொடர்ந்து 5 அல்லது 10 வருடங்கள் கடந்து தொடர்ந்து வசித்தால் இந்த அனுமதி கிடைக்கும். 

இங்கேயும், EU / EFTA நாடுகள் மற்றும் மூன்றாம் நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு வெவ்வேறு நிபந்தனைகள் விதிக்கப்படுகிறது. தற்காலிக வதிவிட அனுமதி (F ) அகதி அந்தஸ்து தேடிக் கிடையாதோருக்குத் தற்காலிக வதிவிட அனுமதி கிடைக்கும்.

 இந்த அனுமதி ஒவ்வொரு வருடமும் புதுப்பிக்க வேண்டும். வெளிநாட்டவர் அடையாளஅட்டை சுவிஸில் வதியும் வெளிநாட்டவர்கள் வெளிநாட்டவர்களுக்குரிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்வார்கள்.

 அடையாள அட்டையின் வகை பல்வேறு நிபந்தனைகளைப் கொண்டுள்ளது. கிரெடிட் கார்டு வடிவத்திலும் மற்றும் காகிதத்தால் செய்யப்பட்ட (உயிரியல் அடையாளங்கள் அற்ற வெளிநாட்டினர் )அடையாள அட்டைகள். (உயிரியல் அடையாளங்கள் அற்ற வெளிநாட்டினர் அடையாள அட்டைகள், Nicht biometrischer Ausländerausweis). சிலர் ஒரு உயிரியல் அடையாளங்கள் உள்ள வெளிநாட்டினர் அடையாள அட்டைகளை பெறுவர்.

 இந்த அடையாள அட்டையில் உள்ள ஒரு தரவு அட்டையில் விரலடையாளமும் படமும் சேர்க்கப்பட்டிருக்கும். அவர்கள் அறோவில் தம்முடைய உயிரியல் அடையாளங்களைப் பதிவு செய்ய வேண்டும்.தாமே உயிரியல் அடையாளங்களைப் பதிவு செய்யும் நிலையத்தில் (Erfassungszentrum Biometrie) நேரத்தைப் பெற வேண்டும். 

அனைத்து அடையாள அட்டைகளையும் வாழிட கிராமசபையில் பெற்றுக் கொள்ளலாம்.அடையாள அட்டை தொலைந்தால் அல்லது களவாடப்பட்டால் உடனே பொலிஸில் முறையிடவும். நீடிப்புச் செய்தல் தேசிய இனத்தைப் பொறுத்தும் தங்கும் நிலையைப் பொறுத்தும் வதிவிடஉரிமை வித்தியாசமான கால இடைவெளிகளில் நீடிப்புச் செய்து கொடுக்கப்படும். நீடிப்புச் செய்யவேண்டிய காலத்தில் ஒரு பத்திரம் வரும் (Verfallsanzeige) அதை நிரப்பி அதனுடன் பாவிக்கக்கூடிய கடவுச்சீட்டையும் சேர்த்து வதிவிட அனுமதி முடிவதற்கு 2 கிழமைகளுக்கு முன்பே வதியும் கிராமசபையில் கையளிக்க வேண்டும்.

 அவர்கள் தொடர்ந்து மாநில குடிவரவு உள்வாங்குதல் திணைக்களத்திற்கு (Amt für Migration und Integration) அனுப்புவார்கள். அங்கு நீடிப்புச் செய்வதற்குரிய தகைமைகள் சோதிக்கப்படும். ஏதாவது வினாக்களிருப்பின் கிராமசபையிலோ அல்லது குடிவரவு உள்வாங்குதல் திணைக்களத்தையோ நாடுங்கள்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4