2 வருடங்களுக்கு பிறகு தலிபானுடன் பேச்சுவார்த்தை நடத்தும் அமெரிக்கா

#Afghanistan #Taliban #America
Prasu
2 years ago
2 வருடங்களுக்கு பிறகு தலிபானுடன் பேச்சுவார்த்தை நடத்தும் அமெரிக்கா

2021-ம் வருடம் அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து திரும்ப அழைக்கப்பட்டது. இதனையடுத்து மத அடிப்படைவாத தலிபான் அமைப்பினர் அங்கு ஆட்சியை கைப்பற்றினர். 

அப்போதிலிருந்தே தலிபான் அரசாங்கம் அந்நாட்டில் மனித உரிமைகளுக்கு எதிராக செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டு வந்தது. குறிப்பாக மத ரீதியான காரணங்களை வலியுறுத்தி பெண்களின் அடிப்படை உரிமைகளான கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றை தடை செய்திருக்கிறது.

இதுவரை எந்த மேற்கத்திய நாடும் தலிபான் அரசாங்கத்தை முறையாக அங்கீகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆட்சியமைத்த 2 வருடங்களுக்கு பிறகு முதல்முறையாக அமெரிக்க பிரதிநிதிகள், தலிபான் அமைப்பை சேர்ந்தவர்களை கத்தார் நாட்டில் சந்தித்தனர்.

தலிபான் தரப்பில் இருந்து அவர்கள் நாட்டிற்கு அமெரிக்கர்கள் வருவதற்கு விதிக்கப்பட்டுள்ள சுற்றுபயண தடை உட்பட பல தடைகளை நீக்குவது குறித்தும், வெளிநாடுகளில் உள்ள ஆப்கானிஸ்தானின் மத்திய வங்கிக்கு சொந்தமான சொத்துக்களை திரும்ப பெறுவது குறித்தும் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. 

 அமெரிக்க தரப்பில் ஆப்கானிஸ்தானில் நிலவும் மனித உரிமைகள் பிரச்சனை குறித்து முக்கியமாக அலசப்பட்டது. இந்த சந்திப்பில் சிறப்பு அமெரிக்க பிரதிநிதி தாமஸ் வெஸ்ட் மற்றும் பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான உரிமைகள் மற்றும் மனித உரிமைகளுக்கான தூதர் ரீனா அமிரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4