யாழ். பருத்தித்துறையில் தகாத உறவில் ஈடுபட்ட குடும்பப் பெண் கைது

#SriLanka #Jaffna #Point-Pedro #Women #Lanka4 #இலங்கை #பெண் #லங்கா4 #நீதிமன்றம் #யாழ்ப்பாணம்
யாழ். பருத்தித்துறையில் தகாத உறவில் ஈடுபட்ட குடும்பப் பெண் கைது

பருத்தித்துறையில் ஆண்களுடன் தகாத உறவில் ஈடுபடும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளம்பெண்ணை பாலியல் தொற்றுநோய்யுள்ளாரா என பரிசோதிக்க பருத்தித்துறை நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. திருமணமான 23 வயதான இளம் பெண்ணே தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

 பருத்தித்துறை, சாரையடி பகுதியில் நேற்றையதினம் (31) அதிகாலை 1 மணியளவில் இந்தப் பெண் கைது செய்யப்பட்டார். கணவரை விட்டுப்பிரிந்த யாழ்ப்பாணம், அரியாலை, பூம்புகார் பகுதியை சேர்ந்த இந்த இளம்பெண், பருத்தித்துறையில் நண்பியொருவருடன் தங்கியுள்ளார். 

 குறித்த பெண் சமூகப் பிறழ்வில் ஈடுபடுகிறார் என்ற முறைப்பாடு பருத்தித்துறை பொலிசாருக்கு கிடைத்து, இரண்டு முறை பொலிஸ் நிலையம் அழைக்கப்பட்டு எச்சரிக்கப்பட்டிருந்தார். 

 அதன்பின்னர் மீண்டும் சமூகப்பிறழ்வில் ஈடுபட்ட சந்தேகத்தில் நேற்று அதிகாலை கைது செய்யப்பட்டார். முச்சக்கர வண்டியொன்றுடன் அவர் நின்றபோது பொலிசாரால் கைது செய்யப்பட்டார். 

 கைதான பெண்ணுக்கு ஏற்கெனவே திருமணமாகி 3 வயதில் அவருக்கு குழந்தையுள்ளது. இந்நிலையில் மனைவியின் தகாத நடத்தையை அறிந்த கணவர் பிரிந்து சென்று விட்டார். நீதிமன்றம் விடுத்த உத்தரவின் படி தனது பிள்ளை தற்போது மாமனாரின் பராமரிப்பில் இருப்பதாக கைதான பெண் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!