நீரிழிவு அல்லது சக்கரை வியாதி, சலரோகத்தை வராமல் எப்படி தடுப்பது?

#Health #Lanka4 #ஆரோக்கியம் #லங்கா4 #அன்டனி #தேவராஜ் #அன்டனி தேவராஜ் #Antoni #Theva #Antoni Thevaraj
Mugunthan Mugunthan
8 months ago
நீரிழிவு அல்லது சக்கரை வியாதி, சலரோகத்தை வராமல் எப்படி தடுப்பது?

 தடுப்பு முறைகள் 

 நீரிழிவு நோய் வகை 1 க்கான தடுப்பு முறைகள் என எதுவும் வரையறுக்கப்படவில்லை.பொதுவாக, வகை 2 ஆனது 85 விழுக்காட்டிலிருந்து 90 விழுக்காடு வரை பெரும்பாலும் காணப்படுகிறது.

 இந்த நோயினை உடல் எடைப் பராமரிப்பு, உடலியக்கச் செயற்பாடுகளில் ஈடுபாடு, ஆரோக்கிய உணவுப் பழக்கவழக்கம் ஆகியவற்றின் மூலமாகத் தடுக்கவும் தாமதப்படுத்தவும் இயலும். 

அதிக அளவிலான உடலியக்கச் செயற்பாடுகள் அதாவது நாளொன்றுக்கு 90 நிமிடங்கள் உடற்பயிற்சிகள் மேற்கொள்ளப்படும்போது, நீரிழிவு அபாயம் 28 விழுக்காடு குறைகிறது.

 அதுபோல், நல்ல உணவுப் பழக்கவழக்கம் நீரிழிவு நோயைத் தடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. முழு தானியங்கள், நீர்ச்சத்து நிறைந்த உணவுவகைகள், விதைகள், பல் நிறைவுற்றக் கொழுப்புகள் அடங்கிய தாவர எண்ணெய்கள் மற்றும் மீன் உணவுகள் போன்றவை இந்நோயைக் கட்டுப்படுத்துகின்றன.

சர்க்கரை பானம் மற்றும் இறைச்சி வகைகள் ஆகியவற்றைக் குறைத்துக் கொள்ளுதல், நிறைவுற்ற மற்ற கொழுப்புப் பொருட்களை எடுத்துக் கொள்ளுதல் வாயிலாக நீரிழிவைத் தடுக்கமுடியும். 

புகையிலைப் பயன்பாடுகள் நீரிழிவு நோய்க்குக் காரணமாக அமைவதால், புகையிலைப் பொருட்களின் நுகர்வை நிறுத்திக் கொள்வது நல்லது. வகை 2 நோய் உருவாவதில் உடற்பருமன், ஆரோக்கியமற்ற உணவு, சோம்பல் தன்மை, புகையிலைப் பயன்பாடு ஆகியவை முக்கியக் காரணிகளாக உள்ளன.

 சமூக, பொருளாதார, பண்பாட்டு மாற்றங்களும் மக்கள்தொகை வளர்ச்சி, உலகமயமாக்கல் மற்றும் நகரமயமாக்கல் முதலிய காரணிகளும் பொது சுகாதாரச் சூழல்களும் இன்றியமையாதவையாக உள்ளன.

https://chat.whatsapp.com/JvgzHYTJAZY7tLCp3O0400

தகவல் மற்றும் ஆலோசனை

images/content-image/1690874383.jpg