இரும்பு சத்துஅதிகம் நிறைந்துள்ள ஆட்டு ரத்த பொரியல் செய்வது எப்படி

#India #Recipe #Cooking #Tamilnews
Mani
9 months ago
இரும்பு சத்துஅதிகம் நிறைந்துள்ள ஆட்டு ரத்த பொரியல் செய்வது எப்படி

தேவையான பொருட்கள்:

  • 1 கப் ஆட்டு ரத்தம்
  • கைப்பிடி கடலைப்பருப்பு 1 கப் தேங்காய் துருவல்
  • 1 தேக்கரண்டி சோம்பு
  • 1 பெரிய வெங்காயம்
  • 6 பல் பூண்டு
  • கறிவேப்பிலை சிறிது
  • உப்பு தேவைக்கு
  • மஞ்சள் தூள் சிறிது
  • 1/4 தேக்கரண்டி மிளகாய் தூள்
  • மல்லித் தூள் சிறிது
  • எண்ணெய் தாளிக்கதேவையான அளவு
  • 1 துண்டு பட்டை

செய்முறை:

  • இட்லி பானையில் தண்ணீர் ஊற்றி ரத்தத்தை ஒரு கிண்ணத்தில் வைத்து மூடி வேக வைக்கவும்.
  • கத்தியால் நடுவில் விட்டு பார்த்து ஒட்டாமல் வருகிறதா என உறுதிப்படுத்தி இறக்கவும்.பூண்டு, வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்.
  • கடலைப்பருப்பை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். தேங்காய் துருவலுடன் சோம்பு சேர்த்து ஒரு சுற்று அரைத்து வைக்கவும்.
  • வேகவைத்த ரத்தத்தை பொடியாக நறுக்கி வைக்கவும். நறுக்கிய ரத்தத்தில் கடலைப்பருப்பு, தேங்காய் துருவல், உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லித் தூள் சேர்த்து பிசையவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு பட்டை, சோம்பு தாளித்து வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, பிசைந்து வைத்திருக்கும் கலவையை சேர்த்து நன்கு பிரட்டி இறக்கவும்.
  • சுவையான ரத்தப்பொரியல் தயார்.