'சந்திரமுகி 2' படத்தில் ‘வேட்டையன் ராஜா’ கதாபாத்திரத்தின் முதல் காட்சி வெளியானது

#India #Cinema #Actor #Actress #TamilCinema #release #trailer #Tamilnews #Movie
Mani
2 years ago
'சந்திரமுகி 2' படத்தில்  ‘வேட்டையன் ராஜா’ கதாபாத்திரத்தின் முதல் காட்சி வெளியானது

சந்திரமுகி முதல் பாகம் வெற்றி தொடர்ந்து 17 வருடங்கள் கழித்து “சந்திரமுகி 2” படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பி.வாசு படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். கங்கனா ரனாவத் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். வடிவேலு மற்றும் பல திரையுலக நட்சத்திரங்களும் இதில் நடிக்கின்றனர்.

லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்பான புகைப்படங்களை படக்குழுவினர் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது.

இதையடுத்து படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருந்தனர். நாளை காலை 10 மணிக்கு ‘சந்திரமுகி 2’ படத்தின் முக்கிய கதாபாத்திரத்தின் படத்தை காண்பிக்க உள்ளதாக படத்தை தயாரித்த குழுவினர் நேற்று தெரிவித்தனர்.

அதன்படி இன்று காலை 'வேட்டையன் ராஜா' கதாபாத்திரத்தின் முதல் தோற்றம் வெளியாகியுள்ளது

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!