தமிழ் கட்சிகளை சந்திக்கும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே!

#India #SriLanka #Tamil People #srilankan politics
Mayoorikka
2 years ago
தமிழ் கட்சிகளை சந்திக்கும் இந்திய  உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே!

இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் தமிழ்க் கட்சிகளுக்கு இடையில் செவ்வாய்க்கிழமை (02) சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக அறியமுடிகின்றது. 

 இந்த சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் சுமந்திரன், சிறிதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், சாணக்கியன் கலையரசன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர். மேலும் டெலோ கட்சி சார்பாக செல்வம் அடைக்கலநாதன், கோவிந்தம் கருணாகரன், விநோதரலிங்கம், புளொட் தலைவர் சித்தார்த்தனும் கலந்துகொள்ளவுள்ளனர்.

 ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவுக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டுமென இந்தியப் பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.

 இதனை தொடர்ந்து கொழும்பில் இடம்பெற்ற அனைத்துக்கட்சி கூட்டம் எவ்வித தீர்மானமும் இன்றி முடிவுக்கு வந்த நிலையில் இந்திய உயர்ஸ்தானிகர் தமிழ் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!