உக்ரைன் தாக்குதலை அடுத்து ரஷ்யாவில் உள்ள விமான நிலையம் மூடப்பட்டது

#Russia #War #Russia Ukraine
Prathees
2 years ago
உக்ரைன் தாக்குதலை அடுத்து ரஷ்யாவில் உள்ள விமான நிலையம் மூடப்பட்டது

ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோ மீது உக்ரைன் மீண்டும் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியது.

 இந்த தாக்குதலில் இரண்டு கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

 தாக்குதல்கள் காரணமாக தலைநகரில் உள்ள ஒரு விமான நிலையத்தை மூட ரஷ்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 தாக்குதல் நடத்த வந்த ஆளில்லா விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், மேலும் இரண்டு ஆளில்லா விமானங்கள் விபத்துக்குள்ளானதாகவும் ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 இந்தத் தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 எனினும், தாக்குதல் நடத்தியதாக ரஷ்யாவின் குற்றச்சாட்டை உக்ரைன் கடுமையாக மறுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!