மா ஓயாவில் நீராடச் சென்ற ஒருவர் உயிரிழப்பு!

#SriLanka #Lanka4 #Died
Thamilini
2 years ago
மா ஓயாவில் நீராடச் சென்ற ஒருவர் உயிரிழப்பு!

மா ஓயா, போயலில் நீராடச் சென்ற இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

மாவனெல்ல அத்தனகொட பிரதேசத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்த இராணுவ வீரர் தனது நண்பர்களுடன் நீராடச் சென்ற நிலையில், நீரிழ் மூழ்கியுள்ளார். 

இதனை அறிந்த அந்த பகுதி மக்கள் அவரை காப்பாற்றி கரைக்கு கொண்டுவந்துள்ளனர். இதனையடுத்து மாவனல்லை ஆரம்ப வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இருப்பினும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் அறிவித்துள்ளனர். 

யடிகல் ஒலுவ, பொல்கஹவெல, மஹமெவ்னாவ வீதியில் வசித்து வந்த 23 வயதுடைய குமார என்ற இராணுவ சாரதியே உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!