இலங்கை பாரளுமன்றத்தில் பெண் ஊழியர்களுக்கு பாதுகாப்பில்லை?
இலங்கை நாடாளுமன்றில் பணிப்புரியும் பெண் ஊழியர்கள் பாலியல் துஷ்பிரயோகங்களை எதிர்நோக்குவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
தங்களுடைய மேலதிகாரிகளால் பல்வேறு பாலியல் துஷ்பிரயோகங்களை எதிர்கொள்வதாகவும், அவர்களின் ஆசைக்கு இனங்காவிட்டால் பல்வேறு பழிவாங்கள் நடவடிக்கைகளை எதிர்கொள்வதாகவும் தெரிவித்த பெண்கள், இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
இது குறித்து பெண் ஊழியர்கள் சமீபத்தில் நாடாளுமன்ற முக்கியஸ்தர்களிடம் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் பாதுகாப்பான இடமாக கருதப்படும் நாடாளுமன்றில் பெண்கள் இவ்வாறான துஷ்பிரயோக சம்பவங்களை எதிர்கொள்வது குறித்து நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீரவிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதற்கு பதிலளித்த அவர், உண்மையில் அப்படியான சம்பவங்கள் இடம்பெறுமாக இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை எதிர்காலத்தில் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சங்கத்தில் இது தொடர்பில் எழுத்து மூலம் முறைப்பாடு செய்யவுள்ளதாகப் பாதிக்கப்பட்ட பெண் ஊழியர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.