இலங்கையில் உண்மையில் இனப்பிரச்சினை என்ற ஒன்று இருக்கிறதா? - கொந்தளிக்கும் தேரர்!

#SriLanka #Lanka4 #13th Amendment Act
Thamilini
2 years ago
இலங்கையில் உண்மையில் இனப்பிரச்சினை என்ற ஒன்று இருக்கிறதா? - கொந்தளிக்கும் தேரர்!

தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியமில்லை எனவும், அவ்வாறு கொண்டுவந்தால் மிகுதியை நாங்கள் பார்த்துக்கொள்வோம் எனவும்  தேசிய வளங்களைப் பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் எல்லே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார். 

கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாற குறிப்பிட்டார்.

மேலும் தெரிவித்த அவர்,  13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தினால் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணலாம் என அரசாங்கம் குறிப்பிடுகிறது. நாட்டில் முதலில் இனப்பிரச்சினை என்பதொன்று உள்ளதா? என்பதை அரசாங்கம் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். 

அத்துடன்  நாட்டு மக்கள் அனைவருக்கும் ஏதாவதொரு பிரச்சினை உள்ளது. வங்குரோத்து நிலைக்கு மத்தியில் ஒரு தரப்பினரது பிரச்சினைகளுக்கு மாத்திரம் தீர்வு காண அரசாங்கம் முயற்சித்தால் அதை கடுமையாக விமர்சிப்போம் என்றும்  அரசியலமைப்பின் 13 ஆவது திருத்த நடைமுறைத் திட்டத்தை அரசாங்கம் முதலில் கொண்டு வரட்டும் அதன் பின் செய்ய வேண்டியதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் எனவும் அவர் விமர்சித்துள்ளார். 

தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்ததை நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை ஏதும் கிடையாது. அரசியல்வாதிகள் தங்களின் குறுகிய அரசியல் நோக்கத்துக்காக முரண்பாடுகளை தோற்றுவிக்காமல் இருந்தால் பிரச்சினைகள் தோற்றம் பெறாது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!