இந்த வருடத்தில் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37ஆக அதிகரிப்பு
#SriLanka
#Lanka4
#Dengue
Kanimoli
2 years ago
இந்த வருடத்தில் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37ஆக அதிகரித்துள்ளதுடன், இதுவரை 56,228 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
அதில் 27, 883 பேர் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளனர். மேல் மாகாணத்தில் அதிகூடிய டெங்கு நோயாளர்கள், கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ளதுடன், அந்த மாவட்டத்தில் 12,154 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
கடந்த 2022 ஆம் ஆண்டின் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடையும் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் நளின் ஆரியரத்ன தெரிவித்தார்.