யாழ்ப்பாணத்தில் மற்றொரு இளம்பெண் மர்மமான முறையில் மரணம்
யாழ்ப்பாணம், சுழிபுரம் பகுதியில் வசிக்கும் யுவதி ஒருவரின் வீட்டில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 27ஆம் திகதி நடைபெற்ற சப்ரகமுவ பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்ற யுவதியின் சடலமொன்று கடந்த 28ஆம் திகதி கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் சுழிபுரத்தைச் சேர்ந்த சத்குணரத்தினம் கௌசி என்ற யுவதியே உயிரிழந்துள்ளார். யுவதியின் பெற்றோர்கள் தனித்தனியாக வாழ்ந்துவருவதாகவும், குறித்த யுவதியின் பட்டமளிப்பு விழாவிற்கு பெற்றோர் இருவரும் வருகை தந்திருந்ததாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
பட்டமளிப்பு விழா முடிந்ததும், பெற்றோருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, மனம் உடைந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
உயிரிழந்த யுவதியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.