துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளைஞனின் சடலம் மீட்பு
#SriLanka
#Vavuniya
#Death
Prathees
2 years ago
வவுனியா, பாலமோட்டை பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளைஞனின் சடலம் நேற்று (29) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா, ஓமந்த பொலிஸார் தெரிவித்தனர்.
21 வயதான குறித்த இளைஞன் அப்பகுதியில் தோட்ட வேலை செய்து வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஓமந்தை வேப்பங்குளத்தைச் சேர்ந்த சத்குணராசா திசாந்த் என்ற இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞன் தோட்ட வேலை செய்து கொண்டிருந்த இடத்திலிருந்து சுமார் 100 மீற்றர் தொலைவில் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், குறித்த இளைஞனின் உடலில் தோட்டாக் காயம் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இளைஞரின் மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்பது தெரியவரவில்லை.
சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஓமந்த பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.