நைஜர் அரசாங்கத்திற்கு அளித்து வந்த சலுகைகள் நிறுத்தியது ஐரோப்பிய ஒன்றியம்
#world_news
#European union
#SouthAfrica
Prathees
2 years ago

நைஜருடன் ஏற்கனவே இருந்த பாதுகாப்பு ஒத்துழைப்பை நிறுத்த ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்துள்ளது.
அந்நாட்டு இராணுவம் ஜனாதிபதியை பதவி கவிழ்த்து நாட்டில் அதிகாரத்தை கைப்பற்றியமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐரோப்பிய ஒன்றியமும் பட்ஜெட் நிவாரணம் வழங்குவதை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவின் தலைவர் தாம் நாட்டின் தலைவர் என அறிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஜோசப் பொரெல் ஆகியோர் கூட்டாக புதிய தலைமையை ஏற்க மறுத்துவிட்டனர்.
இதேவேளை, நைஜர் இராணுவத்தை 15 நாட்களுக்குள் தமது முகாம்களுக்குச் செல்லுமாறு ஆபிரிக்க ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.



