கனடா சிறந்த தேசமாக விளங்குவதற்கு இலங்கை தமிழர்களும் பங்காற்றியுள்ளனர் - கனடா தூதுவர்!
#SriLanka
#Lanka4
Thamilini
2 years ago
கனடாவில் இனப்படுகொலை இடம்பெற்றது என்பதை ஏற்றுக்கொண்டுள்ள இலங்கைக்கான கனேடிய தூதுவர் கனடா சுதேசிய மக்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயல்கின்றது எனவும், இலங்கைக்கும் இதற்கான திறன் உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கனடா தன்னை இருமொழி நாடாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் முன்னிறுத்தியுள்ளது எனவும் தமிழ் மொழியையும் கடைப்பிடிக்கப்படுவதாகவம் கனேடிய தூதுவர் எரிக்வோல்ஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கையும் இதனை சாதகமான அம்சங்கள் சாதகதன்மைகளுடன் முன்னெடுக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கனடா ஒரு சிறந்ததேசமாக விளங்குவதற்கு இலங்கை தமிழர்கள் ஆற்றியுள்ள பங்களிப்பை அவர் பாராட்டியுள்ளார்.