கிளிநொச்சி கசிப்பு கோட்டையாக மாறும் நிலை
கசிப்பு கோட்டையாக மாறும் தமிழர்களின் அரசியல் தலைநகரம் கிளிநொச்சி. கிளிநொச்சி செல்வாநகர், வட்டக்கச்சி கல்மடு, தர்மபுரம் , மருதங்கேணி போன்ற இடங்களில் கசிப்பு உற்பத்தி காட்டாற்று வெள்ளம் போல் புரள்கின்றது.
கடந்த ஜந்து வருடங்களுக்கு முன் சிறிய சிறிய கான் மற்றும் போத்தல்களாக நீதிமன்றம் எடுத்து செல்லப்பட்ட சான்று பொருட்கள் இன்று பரல்களாக ஏற்றி செல்ல வேண்டிய அளவுக்கு கசிப்பு உற்பத்தி வளர்ந்து விட்டது.
விடுதலைபுலிகள் காலத்தில் கசிப்பு உற்பத்தியை தடுக்க அவர்கள் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனையும். குடிகாரர்களுக்கு குடிப்பதற்கு #பியர் வகைகளையும் உற்பத்தி செய்து வினியோகித்தனர்.
கிளிநொச்சியில் வடிசாலை அமைக்கப்பட்டது. மிக குறைந்த அற்ககோலுடன் பியர் உற்பத்தி குடிமக்களுக்கு கிடைத்ததால் கசிப்பு உற்பத்தி அன்று தடுக்கப்பட்டது.
ஆக மொத்தம் கிளிநொச்சி , முல்லைதீவு மாவட்டங்களின் மிகப்பெரிய கசிப்பு உற்பத்தியை தடுக்க சட்டம் கடுமையாக நடைமுறைபடுத்தப்படும் சம நேரத்தில் குடிமக்களை திருப்திபடுத்தவும் , ஆட்கொல்லி கசிப்பு பாவனையில் இருந்து குடிகாரர்கள் மீட்கவும் தற்காலிகமாக சில மென் அற்ககோல் அதாவது பியர் மட்டும் விற்பனை செய்யும் மதுசாலைகள் சிலவற்றை மக்களிற்கு இடையூறு இன்றி திறப்பது தான் யதார்த்தம்.
வெறுமனே சட்டம் போட்டு தடுக்கின்ற விவகாரம் அல்ல இது. இன்றைய பாதுகாப்பு செயலர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமால் குணரட்ணா எழுதிய நந்திக்கடலுக்கான பாதை எனும் புத்தகத்தில் போரின் முடிவில் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட விடுதலைபுலிகள் தலைவர் புகைப்படங்களை கைப்பற்றி இருந்தோம் ஆனாலும் ஒன்றில் கூட அவர் மது குவளையுடன் நாம் காணவில்லை.
அவ்வாறு ஒழுக்கம் மிக்க தலைவர் என பாராட்டி இருந்தார். தலைவன் கூட இந்த குடிகாரர்களை கசிப்பின் பிடியில் இருந்து மீட்க இந்த தீர்மானத்தை தான் எடுத்தார்.
குறிப்பு :-- நாம் மதுசாலை திறக்க கோரவில்லை. ஆனாலும் இந்த பிராளயத்திற்கு என்ன தீர்வு என வரலாற்றின் வழியே தேடினால் அந்த வரலாறு எமக்கு இப்படி தான் வழிகாட்டுகின்றது.