பிரிட்டனில் மணிப்பூர் வன்முறைக்கு எதிராக பெண்கள் குழுவொன்று பேரணி

#India #UnitedKingdom #world_news #Lanka4
பிரிட்டனில் மணிப்பூர் வன்முறைக்கு எதிராக பெண்கள் குழுவொன்று பேரணி

பிரிட்டனில் உள்ள இந்திய வம்சாவளி பெண்கள் குழு மணிப்பூர் வன்முறைக்கு எதிராக அமைதி வழிப் போராட்ட பேரணியை மேற்கொண்டனர்.

 அமைதி வழிப் பேரணியை வெளிப்படுத்தும் விதமாக இந்தக் குழு முகக் கவசம் அணிந்து பேரணியில் கலந்து கொண்டனர். லண்டனில் உள்ள இந்தியன் ஹை கமிஷன் முன்பு பதாகைகளை ஏந்தி நின்ற இந்தக் குழு பின்னர் அங்கிருந்து நாடாளுமன்ற வளாகத்துக்கு எதிராக உள்ள மகாத்மா காந்தியின் சிலை நோக்கிச் சென்று தங்களது இந்த அமைதியான பேரணியை முடித்துக் கொண்டனர்.

 இந்த அமைதி வழி போராட்டம் தொடர்பாக இந்திய வம்சாவளி பெண்கள் குழு தரப்பில் கூறியதாவது: மணிப்பூரில் இரண்டு குகி இன சகோதரிகளை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு கூட்டுப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதற்கு எதிராக இந்த அமைதி வழிப் பேரணியை நாங்கள் நடத்தியுள்ளோம். அந்த சகோதரிகளுடன் நாங்கள் உறுதியாக துணை நிற்கிறோம் எனக் கூறினர். 

 மணிப்பூரில் குகி இனப் பெண்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட இந்த கொடூரத்தினை சிபிஐ விசாரணை செய்ய வேண்டுமெனவும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுமெனவும் அரசு தரப்பில் கூறப்பட்டடுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4