சமூக வலைதள மோகத்தால் 10மாத குழந்தையை விற்ற தாய்

#Bangladesh #baby #Mobile
Prasu
2 years ago
சமூக வலைதள மோகத்தால் 10மாத குழந்தையை விற்ற தாய்

மேற்கு வங்காள மாநிலம், வடக்கு 24 பர்கானா மாவட்டத்தை சேர்ந்த பெண் ஷதி, ஜெயதேவ் என்கிற தம்பதி 10 மாதம் சுமந்து பெற்றெடுத்த குழந்தையை சமூக வலைதள மோகத்தால் விற்பனை செய்து உள்ளனர். அதுவும் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போடுவதற்காக ஐபோன் வாங்க இந்த காரியத்தை செய்து உள்ளனர்.

பொருளாதார நெருக்கடியில் இருந்த தம்பதியினர் திடீரென ஐபோன் வாங்கியதை அக்கம்பக்கத்தினர் கவனித்து இது குறித்து பொலிஸாருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர்.

இதை தொடர்ந்து பொலிஸார் குழந்தையை விற்ற தாய் ஷதி மற்றும் வாங்கிய பிரியங்கா கோஷ் என்ற பெண் ஆகியோரை கைது செய்துள்ளனர். அதோடு தலைமறைவாக உள்ள குழந்தையின் தந்தை ஜெயதேவை பொலிஸார் தேடி வருகின்றனர்.

குழந்தையை விற்று பணத்தைப் பயன்படுத்தி மேற்கு வங்காளத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று இன்ஸ்டாகிராம் ரீல்களை உருவாக்கினோம் என்று ஒப்புதல் அளித்து உள்ளார்.

அதிர்ச்சியூட்டும் வகையில் முதலில் ஏழு வயது மகளை தந்தை விற்க முயன்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4