தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 உயர்வு
#India
#Tamilnews
#Gold
#Breakingnews
Mani
1 year ago

கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை கணிக்க முடியாத அளவுக்கு ஏற்ற இறக்கமாக இருந்தது. இந்நிலையில், தங்கத்தின் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.
இதையடுத்து, சென்னையில் 22கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து, ரூ. 44,416-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.17 உயர்ந்து ரூ.5,552-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல் ஒரு கிராம் வெள்ளியின் விலை 40 காசுகள் உயர்ந்து தற்போது ரூ.80.40க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 80,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.



