இலங்கையில் கடந்த வருடம் நோய் காரணமாக உயிரிழந்த 250 பொலிஸ் அதிகாரிகள்
கடந்த வருடம் மாத்திரம் பல்வேறு நோய்கள் காரணமாக இரு பெண் பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 250 பொலிஸார் இலங்கையில் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது.
சிறுநீரக நோய்கள், புற்றுநோய் மற்றும் பல்வேறு சுகயீனங்கள் காரணமாகவும் கடந்த வருடம் 109 பொலிஸார் உயிரிழந்திருக்கிறார்கள். அதிகளவிலான மனஅழுத்தங்கள், தூக்கமில்லாது தொடர்ந்து பணியாற்றுவது இப்படியான காரணங்களாலும் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக வைத்தியர்கள் தெரிவிக்கிறார்கள்.
பொலிஸாரின் மனஅழுத்தம் என்பது தவிர்க்க முடியாததெனவும், தனித்துவமானது எனவும் அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த வருடம் உயிரிழந்த 250 பொலிஸாரில் அதிகமானவர்கள் மாரடைப்பால் உயிரிழந்திருக்கிறார்கள். உயிரிழந்த பொலிஸாரின் மொத்த எண்ணிக்கையில் இது 31 சதவீதமாகும்.
இதற்க்கு முக்கிய காரணமாக போலீஸ் உத்தியோககத்துக்கு போகும்பொழுது அதிக உடற்ப்பயிற்ச்சி செய்தவர்கள் அத்ஜிகமான போலீசார் பின்னர் அதை தொடராமல் உடற்ப்பயிற்ச்சி செய்யும்பொழுது உண்ட அதிக புரத, கொழுப்பு, மாச்சத்து உணவுகளை திடத் ந் தும் உண்டதால் கொலஸ்திரோல், சலரோகம் வ ந் தே மாதடைப்பால் இறந் துள்ளார்களெனவும் அவரவர் வைத்திய அறிக்கையிலிரு ந் து தெரிய வந் துள்ளது.