இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய்க்கு வரி விதிப்பு!

#SriLanka #Oil
Thamilini
2 years ago
இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய்க்கு வரி விதிப்பு!

இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய் மீதான வரியை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.  

உள்ளூர் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்களை பாதுகாக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

இதன்படி "சுத்திகரிக்கப்பட்ட அல்லது சுத்திகரிக்கப்படாத தேங்காய் எண்ணெய் மீதான வரியை அடுத்த வாரத்தில் அதிகரிக்க எதிர்பார்ப்பதாகவும், இதன்மூலம்  நாட்டின் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்களுக்கும் தேங்காய் விவசாயிகளுக்கும் இறுதியாக நியாயமான விலை கிடைக்கும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். 

இந்நிலையில் இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர் சங்கத்தின் பிரதம அழைப்பாளர்  புத்திக டி சில்வா, இதன் மூலம் நுகர்வோருக்கு எவ்வித நிவாரணமும் கிடைக்கப் போவதில்லை என தெரிவித்துள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!