கராஜ் ஒன்றின் மீது மரம் வீழ்ந்ததில் இருவர் உயிரிழப்பு!

#SriLanka #Death #Accident #Hospital
Mayoorikka
2 years ago
கராஜ் ஒன்றின் மீது மரம் வீழ்ந்ததில் இருவர் உயிரிழப்பு!

அக்குரஸ்ஸை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மரம் ஒன்று வீழ்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

 இன்று (22) காலை அக்குரஸ்ஸை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வீசிய பலத்த காற்றினால், அமலகொட பகுதியில் உள்ள வாகனம் பழுது பார்க்கும் கராஜ் ஒன்றுக்கு அருகே இருந்த பழமையான மரம் ஒன்று விழுந்ததில், அங்கிருந்த 5 பேர் மரத்திற்கு அடியில் சிக்கிய நிலையில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

 படுகாயமடைந்த ஏனைய 4 பேரில் ஒருவர் அக்குரஸ்ஸை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்த ஏனைய மூவரும் மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 உயிரிழந்தவர்கள் 28 மற்றும் 65 வயதுடைய மெலவ்வ, அக்குரஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

 சம்பவ இடத்தில் உள்ள உயிரிழந்த நபரின் சடலம் அக்குரஸ்ஸ மரண விசாரணை அதிகாரியால் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் மற்றைய சடலம் அக்குரஸ்ஸ வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

 மாத்தறை மாவட்ட அக்குரஸ்ஸை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!