தலிபான்களுக்கெதிராக அழகு நிலைய பெண்கள் போராட்டத்தில்

தலிபான்களுக்கெதிராக அழகு நிலைய பெண்கள் போராட்டத்தில்

ஆப்கானிஸ்தானில் அழகு நிலையப் பெண்கள் பலர் தலிபான்களின் அழகு நிலையம் நடத்தக் கூடாது என்ற உத்தரவுக்கு எதிராக வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தலிபான்கள் கடந்த மாதம் பெண்கள் அழகு நிலையங்களை நடத்துவதற்கு தடை விதித்து உத்தரவிட்டனர். இதனைத் தொடர்ந்து காபூல் உள்ளிட்ட நகரங்களில் நடத்தப்பட்டு வந்த அழகு நிலையங்கள் மூடப்பட்டன. 

தலிபான்கள் உத்தரவால் ஏராளமான பெண்கள் வேலை இழந்தனர். இந்த நிலையில், தலிபான்களின் உத்தரவை எதிர்த்து பெண்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

 காபூல் உள்ளிட்ட இடங்களில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் கூடி ”எங்கள் ரொட்டியையும், தண்ணீரையும் பறிக்காதீர்கள்” என்று முழக்கமிட்டனர். போராட்டத்தில் பங்கேற்ற பெண்கள் பேசும்போது, “இன்று நாங்கள் பேசுவதற்கும், பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் இந்தப் போராட்டத்தை ஏற்பாடு செய்தோம்.

இருப்பினும், அவர்கள் எங்களிடம் பேசவோ, எங்கள் சொல்லைக் கேட்கவோ இல்லை. பதிலுக்கு வானில் துப்பாக்கியால் சுட்டும், தண்ணீர் பீரங்கி மூலம் நீர் பாய்ச்சியும் எங்களை கலைத்தனர். என்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4