அல்ப்ஸ் மலை உச்சியில் கேபிள் கார் பழுது: பயணிகளை மீட்க உலங்கு வானுார்தி!

#Switzerland #சுவிட்சர்லாந்து
அல்ப்ஸ் மலை உச்சியில் கேபிள் கார் பழுது: பயணிகளை மீட்க உலங்கு வானுார்தி!

சுவிட்சர்லாந்தின் அல்ப்ஸ் மலை உச்சியில் கேபிள் கார் பழுதடைந்ததால் அதில் சிக்கியிருந்த பயணிகள் சுமார் 300 பேர் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டனர்.

 தென்மேற்கு சுவிட்சர்லாந்தில் உள்ள லெஸ் டயபிள்ரெட்ஸ் மலைப் பகுதியில் உள்ள பிரபலமான பனிப்பாறையில் கிளேசியர் 3000 ஸ்கை ரிசார்ட் வரையிலான கேபிள் காரில் நேற்று காலை 11மணியளவில் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டது. 

இதுபோன்ற சந்தர்ப்பங்களில் கேபிள் காரில் ஒரு சிறப்பு இயந்திரம் பொருத்தப்பட்டிருப்பதாகவும், இதன்மூலம், சுற்றுலாப் பயணிகளை வெளியேற்ற முடியும் என்றும் கேபிள் கார் நிலையத் தலைவர் தெரிவித்தார்.

 ஆரம்பத்தில், 2,971 மீட்டர் (9,747 அடி) உயரத்தில் இருந்த சுற்றுலாப் பயணிகள், தொழில்நுட்ப ஊழியர்கள் சிக்கலைச் சரிசெய்யும் நேரத்தில் கண்கவர் காட்சிகளைக் காத்திருந்து மகிழும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர். 

மேலும், மக்களை பதற்றத்திலிருந்து மீட்க மலை உச்சியில் உணவகமொன்றிலிருந்து உணவும் பானங்களும் வழங்கப்பட்டு, பின்னர் மீட்பு பணிக்காக இரண்டு ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்பட்டு அந்த 300 பயணிகளும் மீட்கப்பட்டனர்.


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4