சமுர்த்தி வேலைத் திட்டம் இடைநிறுத்தப்படாது! பிரசன்ன ரணதுங்க

#Lanka4 #srilankan politics #pirasanna ranathunga #samurthi
Kanimoli
2 years ago
சமுர்த்தி வேலைத் திட்டம்  இடைநிறுத்தப்படாது! பிரசன்ன ரணதுங்க

ஆய்வின் அடிப்படையில் திட்டமிடப்பட்ட சமுர்த்தி வேலைத் திட்டத்தை பலவீனப்படுத்தவும் இடைநிறுத்தவும் அரசாங்கம் செயற்படாது என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

 சமுர்த்தி திட்டம் வெற்றிகரமாக நடைபெறுவதற்கு சமுர்த்தி அதிகாரிகளின் ஆதரவு பெருமளவில் கிடைத்து வருவதாக அமைச்சர் மேலும் கூறினார். மினுவாங்கொடை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 சமுர்த்தி திட்டம் மிகவும் விஞ்ஞான ரீதியாக திட்டமிடப்பட்ட வேலைத்திட்டமாகும். எனவே, சமுர்த்தி திட்டத்தை வலுவிழக்கச் செய்யவும், குழிபறிக்கவும் அரசாங்கம் செயற்படவில்லை. மக்கள் கனவில் கூட அப்படி நினைக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். 

சமுர்த்தி திட்டத்தை மக்களுடன் நெருங்கிச் செல்ல, வேலைத்திட்டத்தில் உள்ள அதிகாரிகளுக்கு பெருமளவு ஆதரவு கிடைத்து வருகிறது. சமுர்த்தி உத்தியோகத்தர்களின் ஆதரவை எமக்கு கிடைக்காவிடின் இந்த வேலைத் திட்டத்தை இவ்வளவு வெற்றிகரமாக செயற்படுத்த முடியாது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!