திறைசேரிக்கு 150 கோடி ரூபாய் வழங்கும் லிட்ரோ நிறுவனம்!

#SriLanka #Litro Gas
Mayoorikka
2 years ago
திறைசேரிக்கு 150 கோடி ரூபாய் வழங்கும் லிட்ரோ நிறுவனம்!

திறைசேரிக்கு ஈவுத் தொகையாக 1.5 பில்லியன் ரூபாவை வழங்கவுள்ளதாக லிட்ரோ எரிவாயு லங்கா நிறுவனம் அறிவித்துள்ளது.

 குறித்த தொகையை தமது தாய் நிறுவனமான இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் ஊடாக இன்று (20) திறைசேரிக்கு வழங்க நடவடிக்கை எடுப்பதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

 எரிவாயு விலையை குறைப்பதன் மூலம் மக்களுக்கு சலுகைகளை வழங்கும்போது கிடைக்கும் சிறிய இலாபத்தின் ஒரு பகுதி அரசாங்கத்திற்கு நிறுவனத்தின் தாய் நிறுவனமான இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் ஊடாக அனுப்பிவைக்கப்படும் என திரு.முதித பீரிஸ் தெரிவித்தார். .

 பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு உறுதுணையாகவே இந்த பாரிய தொகை வழங்கப்படுவதாக தெரிவித்த முதித பீரிஸ், இந்த பணத்தை அரசாங்கம் நிவாரண திட்டத்துக்காக பயன்படுத்தினாலும் அல்லது அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கோ அல்லது வேறு எதற்கெடுத்தாலும் சரி. என தெரிவித்தார்.

 கொழும்பில் உள்ள லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைமையகத்தில் இன்று (20) விசேட ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தியபோதே அதன் தலைவர் முதித பீரிஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!